காத்திருப்பு போராட்டம் பகுதி நேர ஆசிரியர்கள் கைது
காத்திருப்பு போராட்டம் பகுதி நேர ஆசிரியர்கள் கைது
ADDED : ஜன 22, 2026 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, 14வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, பகுதி நேர ஆசிரியர்களை, நேற்று போலீசார் கைது செய்தனர்.
பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், பகுதி நேர ஆசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கடந்த, 8ம் தேதி முதல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று, 14வது நாளாக, 300க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், டி.பி.ஐ., அலுவலகம் அருகே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து, சென்னையில் பல்வேறு திருமண மண்டபங்களில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.
***

