தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க., கூட்டணியில் இருந்து கட்சிகள் பிரியும்: எச்.ராஜா

தி.மு.க., கூட்டணியில் இருந்து கட்சிகள் பிரியும்: எச்.ராஜா

தி.மு.க., கூட்டணியில் இருந்து கட்சிகள் பிரியும்: எச்.ராஜா


ADDED : ஜூன் 29, 2025 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2025 02:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி:தி.மு.க., கூட்டணியில் இருந்து, கட்சிகள் பிரிந்து போகும் என பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

மோடி பிரதமரான பிறகு நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. அதில், காங்கிரஸ் குறை சொல்ல முயற்சிக்கிறது. 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில், இந்தியா மீது பாகிஸ்தான் ஏவிய 700 டிரோன்கள், வானிலேயே தகர்க்கப்பட்டன. இனிமேல், குழந்தைகளுக்கு கூட, சீன தயாரிப்பு ஏரோப்ளேன் பொம்மையை வாங்க மாட்டார்கள். இந்தியாவில், 550 டிரோன் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. அதில், 100, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவில் உள்ளன.

நாட்டில் ஜனநாயகத்தன் குரல்வளை நெரித்து, நெருக்கடி நிலை கொண்டு வந்த காங்கிரசுடன் தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது. போதைப் பொருள் வாயிலாக கிடைத்த வருவாயில், மங்கை என்ற படம் எடுத்துள்ளது. இது குறித்து ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. இந்திய அளவில் அதிக போதைப்பொருள் படுத்திய மாநிலமாக பஞ்சாப் இருந்தது. தற்போது தமிழகம் இருக்கிறது. அடுத்த தலைமுறையை போதைக்கு அடிமையக்கி அழிக்கப்பார்க்கிறது, இந்த அரசு.

தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகள், பிரிந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது. யார் அதிகம் சீட் தருகிறார்களோ, அங்கு கம்யூனிஸ்ட்டுகள் சென்று விடுவர். வைகோ அதிக சீட் கேட்டார் என்பதற்காக, அவரது கட்சியை உடைக்க தொடங்கி விட்டனர். பா.ம.க., பிரச்னைக்கு பா.ஜ., மீது செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டுகிறார். பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப் பாரப்பது எவ்வளவு கேவலமோ, அதை அவர் செய்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us