திருச்சி விமான நிலையத்திற்கு பயணிகள் ஆட்டோவில் செல்ல அனுமதி: துரைவைகோ
திருச்சி விமான நிலையத்திற்கு பயணிகள் ஆட்டோவில் செல்ல அனுமதி: துரைவைகோ
ADDED : ஏப் 15, 2025 06:54 PM
சென்னை:'திருச்சி விமான நிலையத்திற்குள், பயணிகளை இறக்கி விட, ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது' என, திருச்சி எம்.பி.,யான, ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
நாடு முழுதும் விமான நிலையத்திற்குள், ஆட்டோ செல்ல அனுமதியில்லை. திருச்சியில் ஆட்டோக்கள் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். எக்ஸ்பிரஸ் கொரியர் சேவையை கொண்டு வர வேண்டும். சுங்கத்துறை அதிகாரிகளுடன், விமான பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களை சரி செய்ய வேண்டும். முஸ்லிம் பயணிகளுக்காக, வருகை மற்றும் புறப்பாடு இடங்களில், தொழுகை கூடம் அமைக்க வேண்டும்.விமான ஓடுதள விரிவாக்கப் பணிகளை, விரைவாக முடிக்க வேண்டும் என, விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டத்தில், எடுத்துரைத்தேன்.
இதையடுத்து, எக்ஸ்பிரஸ் கொரியர் சேவை, இன்னும் 3 வாரத்தில் துவக்கப்பட உள்ளது. இதனால், திருச்சி விமான நிலையத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆட்டோக்கள் வருகை பகுதியில் உள்ள, வாகன நிறுத்துமிடம் வரை சென்று, பயணிகளை இறக்கி விட அனுமதிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த, இந்திய விமான நிலைய ஆணைய இயக்குனர் ஞானேஸ்வரராவுக்கு நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.