ADDED : மார் 11, 2024 04:41 AM
பா.ம.க., நிறுவனர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டு சாலையில், வன்னியர் சங்கத்தால், 1989ல் வைக்கப்பட்ட அக்னி கலச சின்னம், சாலை மேம்பாட்டு பணிகளுக்காக தற்காலிகமாக அகற்றப்பட்டது.
சாலைப்பணிகள் முடிந்ததும், மீண்டும் வைக்கப்பட்ட அக்னி கலச சின்னம் கடந்த ஜனவரியில் அகற்றப்பட்டது.
அதை மீண்டும் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே, பா.ம.க., வன்னியர் சங்கம் சார்பில், அக்னி கலச சின்னம் வைக்கப்பட்டது.
அதை வலுக்கட்டாயமாக காவல் துறை அகற்றியுள்ளது. இது, கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த இரு ஆண்டுகளாக பா.ம.க., பொறுமையுடன் செயல்பட்டு வருகிறது.
அதை பலவீனமாக தமிழக அரசு கருதினால், அவர்களுக்கு எவ்வாறு பாடம் புகட்ட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.
எனவே, அக்கினி கலச சின்னத்தை தமிழக அரசு மீண்டும் வைக்காவிட்டால், மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க., நடத்தும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்.

