ADDED : பிப் 16, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:வணிகர்களுக்கான சமாதான திட்டத்தை மார்ச், 31 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, வணிக வரித்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடந்த, 2023 தமிழக வரிகள் நிலுவை சட்டத்தின் கீழ், பழைய வரி நிலுவைகள் தொடர்பான சமாதான திட்டம், கடந்த ஆண்டு அக்.,16 முதல் இம்மாதம், 15ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
அத்திட்டத்தின் கீழ், 9,594 விண்ணப்பங்கள் வணிகர்களிடம் இருந்து பெறப்பட்டு, 170 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
வணிகர்களின் கோரிக்கையை ஏற்று, சமாதான திட்டத்தை மேலும் ஒன்றரை மாதங்கள் அதாவது, மார்ச், 31வரை நீட்டித்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.