பால் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஓய்வூதியம் அறிவிப்பு
பால் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஓய்வூதியம் அறிவிப்பு
ADDED : ஜன 22, 2026 02:03 AM

சென்னை: தமிழக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி, ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு, 'பால் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் கருணை ஓய்வூதிய திட்டம்' என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பால்வளத் துறை அமைச்சர் மனோ த ங்கராஜ், வீடியோ பதிவி ல் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க பணியாளர்கள், தங்களுக்கு ஓய்வூதியம் வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் அடிப்படையில், ஓய்வு பெற்ற 2,500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் பணியில் உள்ள 16,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயன் பெறும் வகையில், இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மாநில மூலதன நிதியிலிருந்து, தகுதியுள்ள ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய், கருணை ஓய்வூ தியமாக வழங்கப்படும்.
இந் த சிறிய தொகை துவக்கம் தான். நிதியத்தில் பணம் பெருகும் போது, இந்த மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ், சங்கங்களிடம் இருந்து பெறப்படும் மாதாந்திர சந்தா, மாநில மூலதன நிதியமாக பராமரிக்கப்படும். இத்திட்டம் பால் கூட்டுறவு இயக்கத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் பணியாளர்களின் சமூக பாதுகாப்பிற்கு உதவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

