நாகேந்திரன் கூட்டத்துக்கு எழுச்சியுடன் வரும் மக்கள்
நாகேந்திரன் கூட்டத்துக்கு எழுச்சியுடன் வரும் மக்கள்
ADDED : நவ 14, 2025 11:49 PM

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், தமிழக பா.ஜ., இணை அமைப்பாளர் நாச்சியப்பன் அளித்த பேட்டி:
கும்பகோணத்தில் வரும் 29ம் தேதி, தமிழக பா.ஜ.,வின் அனைத்து பிரிவுகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் 'சங்கமம் 2025' நடைபெறுகிறது. மத்திய அமைச்சர்கள் முருகன், முரளி முகாலே, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா பங்கேற்கின்றனர். கட்சியின் 30 பிரிவுகளில் இருக்கும் 22,000 நிர்வாகிகள் உட்பட 25,000 பேர் கலந்து கொள்கின்றனர். இதில், கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு கிடையாது.
தி.மு.க.,வுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அதனால், தமிழகம் முழுதும், பிரசார பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரனின் கூட்டங்களுக்கு, பலத்த வரவேற்பு உள்ளது. அவரது பிரசார கூட்டங்களில், பொதுமக்களே தாமாக எழுச்சியுடன் வந்து, கலந்து கொள்கின்றனர். எனவே, வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணிக்கு சிறப்பான வாய்ப்பு உள்ளது. பா.ஜ., கூட்டணிக்கு த.வெ.க., தலைவர் விஜய் வருவாரா மாட்டாரா என்று இப்போதே கூற முடியாது. போகப்போக, என்.டி.ஏ., கூட்டணிக்கு விஜய் வர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

