அனைத்து கட்சியில் இருந்தும் தி.மு.க.,வுக்கு வருகின்றனர்
அனைத்து கட்சியில் இருந்தும் தி.மு.க.,வுக்கு வருகின்றனர்
ADDED : ஜன 21, 2025 07:38 PM
பெண்ணுரிமைக்கு போராடிய, ஈ.வெ.ரா.,வை நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான், யாருக்காகவோ விமர்சித்து வருகிறார். அவரைத் தாண்டி அவருக்கு எஜமானர்கள் உள்ளனர். நேற்று வரை அவருக்கு தம்பியாக இருந்தவர்கள், ஈ.வெ.ரா., விமர்சனத்துக்குப் பின், அவரிடம் இருந்து விலகி தி.மு.க.,வுக்கு வந்து விட்டனர். கிருஷ்ணகிரியில் துவங்கி, தமிழகம் முழுதும் தி.மு.க.,வில் இணையும் படலம் தொடருகிறது.
நாம் தமிழர் கட்சி மட்டுமல்ல அனைத்து கட்சிகளில் இருந்தும் இளைஞர்கள் தி.மு.க.,வை நோக்கி வருகின்றனர்.
இண்டியா கூட்டணியை உருவாக்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். இக்கூட்டணி பார்லிமென்ட் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட அனைத்திலும் வெற்றி பெற்றது.
சட்டசபை தேர்தலிலும் இந்த வெற்றி தொடரும். 200 தொகுதிகளில் வெற்றி என்பது கூடுதலாகி வருகிறது.
சக்கரபாணி, தமிழக அமைச்சர்