sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுக.,வுக்கு அடிமையான கம்யூ.,: இபிஎஸ் தாக்கு

/

திமுக.,வுக்கு அடிமையான கம்யூ.,: இபிஎஸ் தாக்கு

திமுக.,வுக்கு அடிமையான கம்யூ.,: இபிஎஸ் தாக்கு

திமுக.,வுக்கு அடிமையான கம்யூ.,: இபிஎஸ் தாக்கு


UPDATED : ஆக 05, 2025 10:42 PM

ADDED : ஆக 05, 2025 07:17 PM

Google News

UPDATED : ஆக 05, 2025 10:42 PM ADDED : ஆக 05, 2025 07:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பாசமுத்திரம் : கம்யூனிஸ்ட் என்றால் என்னவென்று மக்கள் கேட்கும் அளவுக்கு தேய்ந்துவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று திமுகவுக்கு அடிமையாகிவிட்டனர், '' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறினார்.

தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' பயணத்தில் இபிஎஸ் பேசியதாவது: முதல்வருக்கு விவசாயத்தை பற்றி ஒன்றுமே தெரியாது. இபிஎஸ் ஐ எச்சரிக்கிறேன் என்று ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் பேசுகிறார். கம்யூனிஸ்ட் இருக்கிறதா, இல்லையா என்று தேடிப்பிடிக்கும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. ஒருகாலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி போற்றப்பட்டது. கம்யூனிஸ்ட் என்றால் என்னவென்று மக்கள் கேட்கும் அளவுக்கு தேய்ந்துவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று திமுகவுக்கு அடிமையாகிவிட்டனர். 2021 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தோம் என்று திமுகவே காட்டிக்கொடுத்தது. திமுகவே இப்போது கப்சிப்பென்று இருக்கிறார்கள், இவர்கள் பலமாகக் கூவுகிறார்கள்.

விலைவாசி உயர்வு, போக்குவரத்து ஊழியர்கள், விவசாயிகள் பிரச்னைகளுக்கு எல்லாம் போராடினார்களா? எதுக்குமே போராட்டம் நடத்தாத ஒரே கட்சி கம்யூனிஸ்ட்தான். ஏனெனில் அடுத்தமுறை சீட் கிடைக்காது, கூட்டணியில் இருந்து கழட்டி விடுவார்கள். அந்த பயத்தில் தான் மவுனம் காக்கிறார்கள். எங்களிடம் எகிறாதீர்கள். உங்களிடம் இருக்கும் அழுக்கைத் துடையுங்கள். பிரச்னையைப் பேசாவிட்டால் மக்கள் நிராகரித்துவிடுவார்கள்.

மிசாவில் அடைத்த காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளார். எமர்ஜென்சி, மிசா கொண்டுவந்தது காங்கிரஸ், உங்களை கைது செய்ததும் காங்கிரஸ், எங்களைப் பற்றி பேச அவருக்குத் தகுதியில்லை. அதிமுகவை பாஜவிடம் அடமானம் வைத்துவிட்டதாகச் சொல்கிறார். இது தன்மானம் உள்ள கட்சி. யாராலும் எங்களை ஒன்றும் பண்ணமுடியாது.

என் மீது கூட வழக்குப் போட்டு பார்த்தார், அவர்களே வாபஸ் வாங்குவேன் என்று சொன்ன பிறகும், நான் வழக்கை நடத்தி நிரபராதி என்று நிரூபித்து உங்கள் முன்நிற்கிறேன். திமுக அமைச்சர்கள் வாய்தா வாங்குகிறார்கள் உச்ச நீதிமன்றமே குட்டுவைக்கிறது. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

அதிமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு




தென்காசியில் ' 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப் பயணத்தில் இபிஎஸ் பேசியதாவது: ஏற்கனவே கொண்டுவந்த பல திட்டத்தை நிறுத்தியதுதான் திமுகவின் சாதனை. திமுக ஆட்சியில் நாட்டில் நிம்மதியாக யாரும் வாழ முடியவில்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. கஞ்சா விற்காத இடமே இல்லை. இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிவிட்டதால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. கொலை நிலவரம் பார்க்கும் சூழல் உருவாகிவிட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குழைவு காரணமாக தமிழகத்தில் இனி யாருக்கும் பாதுகாப்பு கிடையாது.

அதிமுக ஆட்சியில் குற்ற நிகழ்வுகள் குறைக்கப்பட்டன. கல்வியிலும் அதிமுக அரசுதான் சாதனை படைத்தது. இந்தியாவிலேயே பட்டப்படிப்பில் முதல் மாநிலம் தமிழகம். ஸ்டாலின் ஒரு திட்டம் அறிவித்தார். நலன் காக்கும் ஸ்டாலின், நான்காண்டு கழித்து இப்போதுதான் மக்கள் நலன் பார்க்கிறார். நீங்கள் ஒரு மாதம் முகாம் நடத்திவிட்டு போய்விடுவீர்கள். அதன்பிறகு மக்கள் எங்க போவார்கள்? அதனால்தான் கிராமத்திலேயே மினி கிளினிக் கொண்டுவந்தோம். ஆரம்ப சுகாதார நிலையமும் அமைத்தோம், அதுமட்டுமின்றி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமும் கொண்டுவந்தோம்.

உங்களைப்போன்று மக்களை ஏமாற்றவில்லை. புதுப்புது பேர் வைத்து அதோடு திட்டத்தை கைவிடும் கட்சி திமுக. உங்களுடன் ஸ்டாலின் என்று அரசு அதிகாரிகள் வீடுவீடாக வருகிறார்கள். 46 பிரச்னைகள் இருக்கிறது என்கிறார்கள். நான்காண்டுகள் கழித்து இப்போது தான் மக்களை நினைத்துப்பார்க்கிறார். 46 பிரச்னை இருக்கிறது என்று தெரிந்தும் ஏன் இத்தனை ஆண்டுகளாகத் தீர்த்துவைக்கவில்லை. உடனுக்குடன் பிரச்னைகள் தீர்க்கப்பட்டிருந்தால் இப்பொழுது எழுந்திருக்குமா? நான்காண்டு வீணடித்ததுதான் மிச்சம்.

மோசடி என்றால் திமுக, திமுக என்றால் மோசடி. அடுத்தாண்டு தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்ற நாடகம் போடுகிறார்கள்.ஸ்டாலினை பொறுத்தவரை கூட்டணியை நம்பிக்கொண்டிருக்கிறார். ஆனால் அதிமுக, பாஜ கூட்டணி மக்களை நம்பியிருக்கிறது. மக்கள் தான் நீதிபதிகள். ஆகவே மக்கள் ஆதரவு எங்கள் கூட்டணிக்கு ஏகோபித்த அளவுக்கு இருக்கிறது.

திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும் எடுபடாது. ஸ்டாலின் மாடல் அரசு ஜீரோ மாடல் அரசு. எதுவுமே நிறைவேறவில்லை. அப்படியென்றால் ஸ்டாலின் ஆட்சிக்கு 10க்கு பூஜ்ஜியம் தான் மதிப்பெண். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.






      Dinamalar
      Follow us