sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தனித்து நிற்பதால் பா.ம.க.,வுக்கு மக்கள் ஆதரவு: ராமதாஸ் பேட்டி

/

தனித்து நிற்பதால் பா.ம.க.,வுக்கு மக்கள் ஆதரவு: ராமதாஸ் பேட்டி

தனித்து நிற்பதால் பா.ம.க.,வுக்கு மக்கள் ஆதரவு: ராமதாஸ் பேட்டி

தனித்து நிற்பதால் பா.ம.க.,வுக்கு மக்கள் ஆதரவு: ராமதாஸ் பேட்டி


UPDATED : அக் 09, 2011 01:47 AM

ADDED : அக் 07, 2011 11:10 PM

Google News

UPDATED : அக் 09, 2011 01:47 AM ADDED : அக் 07, 2011 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலூர்: ''தனித்து நிற்பதால், பா.ம.க.,வுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

வேலூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:பா.ம.க., தனித்து போட்டியிடுவதால் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது.

உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க., பெரும் அளவில் வெற்றி பெறும். உள்ளாட்சி அமைப்புக்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும்.கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இதற்காக அங்கு நடக்கும் மக்கள் போராட்டத்துக்கு, பா.ம.க., ஆதரவு அளிக்கும். நெல் கொள்முதல் விலையை, 1, 500 ரூபாயாக உயர்த்த வேண்டும். கரும்பு விலை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். தெலுங்கானாவில், 50 ஆண்டு கால பிரச்னை முடிவுக்கு வராமல் உள்ளது. அங்கு நடக்கும் போராட்டத்தால் தமிழகத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.வேலூர் மாவட்டத்தை இரண்டாக ஆக பிரிக்க வேண்டும். காவிரியை பாலாற்றுடன் இணைக்க வேண்டும். தேர்தல் கமிஷன் நேர்மையான முறையில் செயல்பட வேண்டும். தேர்தலையொட்டி, 10 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.



புதுவையில் ரங்கசாமி கட்சிக்கு ஆதரவு அளிக்கின்றோம். அ.தி.மு.க., வுக்கு பிராதான எதிர் கட்சியாக, பா.ம.க., செயல்படும். தமிழகத்தில் திராவிட கட்சிகளை அப்புறப்படுத்தி, பா.ம.க., தலைமையில் புதிய அணி அமையும்படி செயல்படுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.



அ.தி.மு.க., வில் இருந்து, தே.மு.தி.க., வெளியேறி விட்டதே என நிருபர்கள் கேட்ட போது, ''அது ஒரு கட்சியா. அதற்கு ஒரு தலைவரா, இத்துடனா கூட்டு சேர்ந்தனர். சினிமா ரசிகர்களின் கூட்டம் தானே அக்கட்சியில் உள்ளனர்,'' என்றனர்.








      Dinamalar
      Follow us