பிரியாணி, சவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி; பிலால் ஹோட்டலுக்கு சீல்
பிரியாணி, சவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி; பிலால் ஹோட்டலுக்கு சீல்
UPDATED : ஏப் 03, 2025 10:51 AM
ADDED : ஏப் 02, 2025 06:03 PM

சென்னை: திருவல்லிக்கேணியில் செயல்பட்டு வரும் பிலால் ஹோட்டலில் சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தற்காலிகமாக சீல் வைத்தனர்.
கடந்த 30ம் தேதி இரவு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிலால் ஹோட்டலில் உணவு சாப்பிட்டவர்களில் 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்தனர். இதற்காக, சென்ற போது, ஹோட்டல் மூடப்பட்டிருந்ததால், அதிகாரிகள், உரிமையாளர்களுக்கு செல்போனில் அழைப்பு விடுத்தனர். ஆனால், அந்த அழைப்பை எடுக்காததால், ஹோட்டலுக்கு அதிகாரிகள் தற்காலிகமாக சீல் வைத்து சென்றனர்.
அதேபோல, அண்ணாசாலையில் மற்றொரு ஹோட்டலிலும் இதே பிரச்னை எழுந்ததால், அங்கும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

