sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'திருவிழாவில் குளிர்பானம் குடித்தவர்கள் இறப்பு; கழிவுநீர் கலந்த குடிநீரை யாரும் குடிக்கவில்லை'

/

'திருவிழாவில் குளிர்பானம் குடித்தவர்கள் இறப்பு; கழிவுநீர் கலந்த குடிநீரை யாரும் குடிக்கவில்லை'

'திருவிழாவில் குளிர்பானம் குடித்தவர்கள் இறப்பு; கழிவுநீர் கலந்த குடிநீரை யாரும் குடிக்கவில்லை'

'திருவிழாவில் குளிர்பானம் குடித்தவர்கள் இறப்பு; கழிவுநீர் கலந்த குடிநீரை யாரும் குடிக்கவில்லை'

1


ADDED : ஏப் 22, 2025 07:05 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 07:05 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : “கோவில் சித்திரை திருவிழாவில், குளிர்பானம் குடித்தவர்களுக்கு தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது; குடிநீரில் கழிவுநீர் கலந்ததால், திருச்சியில் யாரும் இறக்கவில்லை,” என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு கூறினார்.

திருச்சி மாநகராட்சியில், கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியவர்கள் உயிரிழந்தது குறித்தும், பலர் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும், சட்டசபையில் நேற்று, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக விவாதிக்க, சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கினார்.

அப்போது நடந்த விவாதம்:

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: திருச்சி மாநகராட்சி உறையூரில், 10வது வார்டில், 15 நாட்களுக்கு மேலாக, குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது. அதை குடித்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

குடிநீரில் கழிவுநீர் கலப்பு குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

அமைச்சர் நேரு: திருச்சி மாநகராட்சி, 10வது வார்டில், வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், சுகாதார பிரிவு வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை சேர்ந்த, 53 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் வயிற்குப்போக்கு ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

மூதாட்டி மருதம்மாள், 10 நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, இயற்கை எய்தியுள்ளார். லதா என்பவர் இதயநோயால் பாதிக்கப்பட்டு, நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்து உள்ளார்.

எனவே, கழிவுநீர் கலந்த குடிநீர் பருகி உயிரிழந்தனர் என்ற பொய் செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

இப்பகுதிக்கு அருகில் உள்ள கோவிலில் சித்திரை திருவிழா நடந்துள்ளது. அங்கு நீர்மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டுள்ளன. குளிர்பானம் குடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குளிர்பானத்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதை யார் வழங்கினர் என்பதை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. திருச்சி மேற்கு தொகுதியில், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நான், 20 ஆண்டுகளாக அங்கு எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும் பணியாற்றி வருகிறேன். எனவே, தொகுதியை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அங்கு, குடிநீரில் கழிவுநீர் கலந்து யாரும் இறக்கவில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

- பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர்.

- பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர்.

உண்மையை மறைப்பதே

இவர்களின் கொள்கை'குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை; அதனால் இறப்பு இல்லை' என, அமைச்சர் நேரு சொல்கிறார். கடந்த 15 நாட்களாக கழிவுநீர் கலந்த குடிநீரை, அப்பகுதி மக்கள் குடித்து வந்துள்ளனர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்; அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கோவில் திருவிழாவில் பல்வேறு ஊர் மக்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை. குறிப்பிட்ட நான்கு தெரு மக்கள், கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதை மறுத்து, அமைச்சர் பதில் கூறுவது கண்டிக்கத்தக்கது. இதேபோல், சென்னை பல்லாவரத்தில் கடந்த ஆண்டு, குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் மூவர் இறந்தனர். அப்பகுதி அமைச்சரும், இதே கருத்தை தெரிவித்தார். சம்பவங்களை மறைப்பதே, இந்த அரசின் கொள்கை.








      Dinamalar
      Follow us