இன்று முதல் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம்: சாலைப்பணியாளர்கள் சங்கம்
இன்று முதல் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம்: சாலைப்பணியாளர்கள் சங்கம்
ADDED : ஜன 20, 2025 12:22 AM

விருதுநகர் : தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 ஆயிரத்து 349 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ.,க்கு ஒன்று வீதம் மொத்தம் 210க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அமைத்து வரி வசூல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் பயணிக்க சுங்க வரி செலுத்த வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்படும்.
மேலும் 5 ஆயிரம் பணியிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும் அவலம் உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி இன்று முதல் பிப்., 28 வரை மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் நடத்துகின்றனர். இதில் பெறப்படும் கையெழுத்து நகல்களை முதல்வர் ஸ்டாலினிடம் மார்ச் 26ல் வழங்கப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க வெளியிடப்பட்ட அரசாணையை திரும்ப பெற கோரிக்கை சாசனம் வழங்கும் இயக்கமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.