விதிமீறல் ஆலைகளுக்கு நிரந்தர தடை: அமைச்சர் உதயநிதி பேட்டி
விதிமீறல் ஆலைகளுக்கு நிரந்தர தடை: அமைச்சர் உதயநிதி பேட்டி
ADDED : பிப் 18, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விதிமீறலில் ஈடுபடும் ஆலைகளுக்கு நிரந்தர தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என விருதுநகரில் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். வாரிசுதாரர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க அரசு வேலை வழங்க வேண்டும் என மனுவாக அளித்துள்ளனர். இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று அங்கன்வாடி மையங்கள், காலை சத்துணவு பணியிடங்களில் முன்னுரிமை கொடுக்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். விதிமீறலில் ஈடுபடும் ஆலைகளுக்கு நிரந்தர தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.

