ADDED : நவ 05, 2024 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்குமாறு, முதல்வர், துணை முதல்வரிடம், அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் மனு அளித்துள்ளனர்.
மனுவில் கூறியுள்ளதாவது:
அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, 2015-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து வழங்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, ஸ்டாலின் எங்கள் பக்கம் நின்றார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான கவனத்தை ஈர்க்கும் வகையில், பல்வேறு போராட்டங்கள் நடத்திய போதும் பலனில்லை.
மற்ற துறையினருக்கு அகவிலைப்படி கொடுக்கப்படுகிறது.
குறைந்தபட்சமாக, 6,000 ரூபாய் என்ற அளவில் ஓய்வூதியம் பெறும் எங்களுக்கு, கோர்ட் தீர்ப்புப்படி, அகவிலைப்படி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

