ADDED : பிப் 21, 2025 12:42 AM
சென்னை:மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் அனுப்பி உள்ள மனு:
காசிக்கும், தமிழகத்துக்கும் உள்ள நீண்ட கால தொடர்பை புதுப்பிக்கும் வகையில், 'காசி தமிழ் சங்கமம்' என்கிற நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி - பனாரஸ் இடையே, 2023ம் ஆண்டு முதல் வியாழன் தோறும் வாரந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் மதுரை, திருச்சி, செங்கல்பட்டு, சென்னை பெரம்பூர் வழியாக இயக்கப்படுவதால், கன்னியாகுமரி மாவட்ட பயணியர் சென்னை செல்ல, கூடுதல் ரயில் சேவை கிடைத்து வருகிறது.
மேலும், பனாரஸ் செல்வோருக்கும் மிகவும் வசதியாக இருக்கிறது. மதுரை - கன்னியாகுமரி இடையே நடந்து வந்த இரட்டை வழி பாதை பணியும் முடிந்துள்ளதால், இந்த வாராந்திர ரயிலை தினமும் இயக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

