ஓட்டலில் பரோட்டா கொடுக்காததால் பெட்ரோல் குண்டுவீச்சு: ஒருவர் கைது
ஓட்டலில் பரோட்டா கொடுக்காததால் பெட்ரோல் குண்டுவீச்சு: ஒருவர் கைது
ADDED : ஜன 28, 2024 11:50 PM

கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட பரோட்டா கொடுக்காததால் பெட்ரோல் குண்டு வீசிய அம்மன்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமாரை 20, போலீசார் கைது செய்தனர்.
கமுதி பஸ் ஸ்டாண்ட் அருகே அல்புஹாரி ஓட்டல் உள்ளது. இங்கு ஜன., 18 இரவு முத்துக்குமார் பரோட்டா சாப்பிட வந்துள்ளார். ஓட்டல் உரிமையாளர் ஷேக் அப்துல்லா சாப்பிட எதுவுமில்லை எனக்கூறினார். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் புரோட்டா கொடுக்கவில்லை என்றால் கடையை எரித்து விடுவேன் என மிரட்டினார். போலீசில் ஷேக் அப்துல்லா புகார் அளித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துக்குமார் பிளாஸ்டிக் பையில் பெட்ரோல் வாங்கி அதில் தீ வைத்து ஓட்டலில் வீசினார். தீ விபத்தில் மாஸ்டர் வேலு 45, முகத்தில் காயமடைந்து கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
உரிமையாளருக்கு அடி
இதேபோன்று ஜன., 21ல் சாயல்குடியில் புரோட்டா கிடைக்காததால் ஓட்டல் உரிமையாளரை தாக்கிய சம்பவம் நடந்தது. எனவே போலீசார் இரவு நேரங்களில் ரோந்து சென்று ஓட்டல்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர்.