வீடு மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு: 5 வாலிபர்கள் கைது
வீடு மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு: 5 வாலிபர்கள் கைது
ADDED : ஜூன் 09, 2025 02:16 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே அடைச்சாணியைச் சேர்ந்தவர் சுந்தரம் 59.
இவரது மகன்கள் இளங்கோ 22, தமிழன் 21. கூலி வேலை செய்கின்றனர். மே 6ல் பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தில் நடந்த கோயில் கொடை விழாவை காண நண்பர்களுடன் சென்றனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இளங்கோ தரப்பினருக்கும் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. பின்னர் இளங்கோ, தமிழன் வீட்டுக்கு வந்து விட்டனர். அதிகாலை 1:00 மணிக்கு மர்ம கும்பல் சுந்தரம் வீட்டின் வாசலில் சரமாரியாக பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
இதில் அவர் வீட்டு முன்பிருந்த பொருட்கள் தீயில் எரிந்தது. அக்கம் பக்கத்தினர் வந்த போது அந்த கும்பல் ஓடி விட்டது.
இளங்கோ புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரித்து அப்பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் 23, கொம்பையா 22, சந்துரு 24, வேலுச்சாமி 20, பொன்ராஜ் 23, ஆகியோரை கைது செய்தனர்.

