ADDED : பிப் 22, 2024 06:53 AM
மதுரை: மத்திய அரசின் தொழிலாளர், வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) அமைப்பின் குறைதீர் கூட்டம் பிப்., 27 காலை 9:00 மணி முதல் நடக்கிறது.
பி.எப்., டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்னைகளுக்கு இ.எஸ்.ஐ.,சி., பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இம்முகாம் நடக்க உள்ளது. குறைகளை தீர்க்க, 't.ly/nPTt' என்ற இணைய தளத்தில் விவரங்களை பதிவு செய்த பின் இக்கூட்டத்தில் பங்கேற்கலாம்.
மதுரை மாவட்டத்தில் மதுரை தத்தனேரி ஸ்ரீமஹா மெட்ரிக்., பள்ளி, திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை தும்மலகுண்டு காட்டன் மில்ஸிலும், தேனியில் சின்னமனுார் வ.உ.சி., நகர் பி.டி.ஆர்.காலனி தெருவில் உள்ள நல்லி மெட்ரிக் பள்ளியிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் துளசிபாபா மடம், ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், சிவகங்கையில் காளையார் கோவில் ஓ.எம்.ஜி.எஸ்., பள்ளியிலும், விருதுநகரில் தளவாய்புரம் பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் முகாம் நடைபெறும் என மண்டல கமிஷனர் அமியகாந்த் தெரிவித்துள்ளார்.