திறந்தநிலை பள்ளி மாணவர்களுக்கும் மருந்தியல் படிப்பு
திறந்தநிலை பள்ளி மாணவர்களுக்கும் மருந்தியல் படிப்பு
ADDED : ஜன 15, 2026 02:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'திறந்தநிலை பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களும், பி.பார்ம்., --- டி.பார்ம்., - பார்ம்.டி., ஆகிய படிப்புகளில் சேரலாம்' என, இந்திய மருந்தியல் கவுன்சில் அறிவித்துள்ளது.
தற்போது வழக்கமான மாநில மற்றும் மத்திய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் மட்டுமே, பி.பார்ம்., உள்ளிட்ட மருந்தியல் படிப்புகளில் சேர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், எல்லா மாநில அரசுகளுக்கும், மாநில மருந்தியல் கவுன்சில்களுக்கும், இந்திய மருந்தியல் கவுன்சில் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.
அதில், 'விதிகளின்படி திறந்தநிலை பள்ளி மாணவர்களையும், பி.பார்ம்., -- டி.பார்ம்., -- பார்ம்.டி., உள்ளிட்ட இளநிலை மற்றும் பட்டய மருந்தியல் படிப்பில் அனுமதிக்க வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளது.

