போன் ஒட்டுக் கேட்பு: தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார்
போன் ஒட்டுக் கேட்பு: தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார்
ADDED : ஏப் 13, 2024 05:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: எதிர்க்கட்சியினரின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக கடிதம் எழுதி உள்ளது.
அதிமுக சார்பில், அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழக உளவுத்துறை அதிகாரிகள் பெகாசஸ் உள்ளிட்ட மென்பொருட்களை பயன்படுத்தி ஒட்டுக் கேட்கிறது.
தமிழக உளவுத்துறை ஐ.ஜி.செந்தில்வேலன் எதிர்க்கட்சியினரின் தொலைபேசிகளை சட்ட விரோதமாக இடைமறித்து மென்பொருட்கள் மூலமாக உரையாடல்களை ஒட்டுக் கேட்கப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

