ADDED : பிப் 05, 2026 03:26 AM

துணை முதல்வர் உதயநிதிக்கு அரசு செலவில், 'பைவ் ஸ்டார்' ஹோட்டல் போன்று குறிஞ்சி இல்லம் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பு, அதிகாரிகள் சந்திப்பு நடத்துவதற்கு தான் அந்த இல்லம். ஆனால், துணை முதல்வர் உதயநிதி, அந்த இல்லத்தில் உள்ள புல் தரையில் நாயுடன் விளையாடி போட்டோ எடுத்து வெளியிடும் பணிகளை மட்டுமே செய்கிறார்.
இப்படி அரசுப்பணம் பல வழிகளிலும் வீணடிக்கப்படும் அக்கிரமம் நடக்கிறது. தி.மு.க., பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.
'கரூரில், 41 உயிர்கள் பலியான குற்ற உணர்ச்சி எதுவுமின்றி மேடையில் விஜய் நடனமாடுகிறார்' என, அ.தி.மு.க.,வின் ஜெயகுமார் கூறியுள்ளார். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் அவர். அவருடைய கட்சியும் அப்படித்தான். அவர்களை பற்றி நாங்கள் பேசப்போவதில்லை.
- நிர்மல்குமார்,
இணை பொதுச்செயலர், த.வெ.க.,

