'பிஸிக்ஸ் வாலா' மைய கல்வி உதவித்தொகை 'நீட், ஜே.இ.இ.' மாணவர்களுக்கு அழைப்பு
'பிஸிக்ஸ் வாலா' மைய கல்வி உதவித்தொகை 'நீட், ஜே.இ.இ.' மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 26, 2025 01:09 AM

சென்னை:'பிஸிக்ஸ் வாலா நேஷனல் ஸ்காலர்ஷிப்' அமைப்பு, நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இதற்கான தகுதித் தேர்வு எழுத விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு, 'பிவி' செயலி அல்லது www.pw.live/NSAT இணையதளம் அல்லது அருகில் உள்ள பிஸிக்ஸ் வாலா மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
'ஆன்லைன்' முறையை தேர்வு செய்யும் மாணவ, மாணவியர், அக்., 1 முதல் 15 வரை தேர்வில் பங்கேற்கலாம். நேரடியாக தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், அக்., 5 முதல் 12ம் தேதி வரை, அனைத்து பிஸிக்ஸ் வாலா பள்ளி மற்றும் பயிற்சி மையங்களில் நேரடியாக தேர்வு எழுதலாம்.
தேர்வு முடிவுகள் அக்., 25ல் வெளியிடப்படும். அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, முழு கட்டணத்தை உள்ளடக்கிய, 100 சதவீத உதவித்தொகை மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
இதுகுறித்து, நிறுவனத்தின் தலைமை செயலர் அலுவலர் அலக் பாண்டே கூறியதாவது:
பல மாணவர்கள் தங்கள் கனவுகளை கைவிட, பொருளாதார பிரச்னை முக்கிய காரணம்.
இந்நிலையை மாற்ற, நாங்கள் முன்னெடுத்துள்ள முயற்சி தான், 'பிஸிக்ஸ் வாலா நேஷனல் ஸ்காலர்ஷிப் டெஸ்ட்' இதில், தகுதியான அனைத்து மாணவர்களும், தங்களின் நியாயமான வாய்ப்பை பெற தகுதி பெறுவர்.
அவர்களின் கனவுகளுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்.
இதுவரை, 14 லட்சம் மாணவர்களுக்கு, 180 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுதும், இந்த ஆண்டு, 250 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
டில்லியில் 'பிஸிக்ஸ் வாலா' அமைப்பின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு, சமீபத்தில் நடந்தது. இடமிருந்து வலம்: பிஸிக்ஸ் வாலா மைய நிர்வாகிகள் தனஞ்ஜெய் மணி, ரோகித் குமார் குப்தா, அலக் பாண்டே, பிரத்தீக் மகேஸ்வரி, அனுப் குமார் அகர்வால், அன்கித் குப்தா.

