தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சரத்குமாருடன் பீயூஷ் கோயல் சந்திப்பு

 சரத்குமாருடன் பீயூஷ் கோயல் சந்திப்பு

 சரத்குமாருடன் பீயூஷ் கோயல் சந்திப்பு


ADDED : ஏப் 07, 2026 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 04:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: பா.ஜ.,வில் பதவி கிடைக்காமல், அதிருப்தியில் உள்ள நடிகர் சரத்குமார் வீட்டிற்கு சென்று, மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், அவரை சந்தித்தார்.

நடிகர் சரத்குமார் தான் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை, 2024ல் பா.ஜ.,வுடன் இணைத்தார்.

அவரின் மனைவியும் நடிகையுமான ராதிகா, அந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

தற்போது பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ள சரத்குமார், தனக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் உள்ளார்.

அவர், தனக்கு பதவி வழங்க, கட்சி தலைமையை வலியுறுத்தக் கோரி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனிடம் சமீபத்தில் கடிதம் அளித்தார்; இன்னும் எந்த பதவியும் அளிக்கப்படவில்லை. சட்டசபை தேர்தல் பிரசாரம் களைகட்ட துவங்கியுள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளருமான பீயூஷ் கோயல் நேற்று சரத்குமார் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுமாறு சரத்கு மாரிடம், பீயூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us