உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : பிப் 07, 2026 02:43 AM
அ நிறம் | அளவு
'மது கடைகளை, நாளை மறுதினம் மதியம் 12:00 மணி முதல், பிற்பகல் 3:00 மணி வரை மூடி, அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்' என, 'டாஸ்மாக்' தொழிற்சங்கங்களின் போராட்ட நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக மதுபானங்களை விற்பனை செய்கிறது.
அந்த கடைகளில் பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழு, சென்னையில் நான்காவது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்நிலையில், 'நாளை மறுதினம் மதியம் 12:00 மணி முதல், 3:00 மணி வரை அடையாள கடைஅடைப்பு போராட்டம் நடத்தப் படும்' என, போராட்ட நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
