பிப்., 25ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை; பட்ஜெட் குறித்து விவாதிக்க திட்டம்
பிப்., 25ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை; பட்ஜெட் குறித்து விவாதிக்க திட்டம்
ADDED : பிப் 19, 2025 02:05 PM

சென்னை: மார்ச் 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பிப்.25ம் தேதி, மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மார்ச் 14ம் தேதி காலை, 9:30 மணிக்கு சட்டசபை கூடுகிறது. அன்று, 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். பின் மார்ச் 21ம் தேதி 2025 - 26ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கைகள், 2024 - 25ம் ஆண்டு கூடுதல் செலவினத்திற்கான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும்.
அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில், முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பிப்.25ம் தேதி, மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

