ADDED : மார் 04, 2025 09:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டிகோ விமானம் நேற்றிரவு 8.15 மணிக்கு புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தது.
பின்னர் மீண்டும் விமானம் கோவைக்குத் திரும்பியது. பின்னர் கோவை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத் செல்ல இருந்த விமானம் மூலம் பயணிகள் சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, இரவு 11.30 மணிக்கு ஹைதராபாத் புறப்பட்டது.