புதிய இந்தியாவுக்கான விலை மதிப்பற்ற தேர்வு பிளாட்டினம் நகைகள்
புதிய இந்தியாவுக்கான விலை மதிப்பற்ற தேர்வு பிளாட்டினம் நகைகள்
ADDED : அக் 26, 2025 01:42 AM
சென்னை: 'புதிய இந்தியாவுக்கு ஒரு விலை மதிப்பற்ற தேர்வு பிளாட்டினம்' என, பிளாட்டினம் கில்ட் இன்டர்நேஷனலின் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான துணை மேலாளர் பல்லவி சர்மா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பண்டிகை காலத்தில் இந்தியா அடியெடுத்து வைக்கும்போது, நகை சந்தை திருப்பு முனையில் நிற்கிறது. விலை மதிப்பற்ற உலோகங்களின் விலை உச்சத்தில் இருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் தேர்வை பரிசீலனை செய்கின்றனர். நம்பகத் தன்மை, வடிவமைப்பு மதிப்பு மற்றும் சமரசம் இல்லாமல், குறைந்த விலையை நாடுகின்றனர்.
இந்த சூழலில், வாடிக்கையாளர்கள் ஈர்ப்பு மற்றும் வணிக நன்மை இரண்டையும் வழங்க, விலை மதிப்பற்ற உலோகமாக பிளாட்டினம் திகழ்கிறது.
சமீபத்திய காலாண்டுகளில் பொருளாதார ஏற்ற, இறக்கங்கள் இருந்தும், பிளாட்டினம் நகைகள் நிலையான செயல் திறனை வெளிப்படுத்தியுள்ளன.
இந்தாண்டின் இரண்டாம் காலாண்டில், 15 சதவீதம் வளர்ச்சியடைந்தது. இது, வலுவான குறியீடு. 95 சதவீதம் துாய்மை, நீடித்த வலிமை மற்றும் தனித்துவமான விலை நன்மையுடன், வாடிக்கையாளர்களுக்கு பிளாட்டினம் வேகமாக ஒரு நவீன மாற்றாக மாறி வருகிறது.
வர்த்தகத்தை பொறுத்தவரை இந்த மாற்றம் ஒரு சரியான நேரத்தில், ஒரு வாய்ப்பை வழங்குகிறது. பிளாட்டினத்தின் சாதகமான விலை இடைவெளியால், சில்லரை விற்பனையாளர்களால், நுகர்வோருக்கு ஏற்ற விலையில் அதிக மதிப்புள்ள தயாரிப்பை வழங்க முடிகிறது.
பிளாட்டினம் வலுவான லாபத்தை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் அதிக விலை நகைகளை வாங்குவதை குறைத்துக் கொண்டிருக்கும் சந்தையில், பிளாட்டினம் வாங்குவது அதிகரிக்கிறது. பி.ஜி.ஐ.,யின் பண்டிகை வரிசை, இந்த திறனை அதிகப் படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
'பிளாட்டினம் லவ் பேன்ட்ஸ்' தொகுப்பு, திருமணம் மற்றும் அர்ப்பணிப்பு கட்டத்தில் நுழையும் இளம் நகர்ப்புற ஜோடியை தொடர்ந்து ஈர்க்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

