தீபாவளிக்குப் பின் இன்ப அதிர்ச்சி...தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு
தீபாவளிக்குப் பின் இன்ப அதிர்ச்சி...தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு
ADDED : நவ 01, 2024 11:22 AM

சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாளே தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்றம், இறக்கத்துடன் காணப்படும் தங்கம் விலை, தீபாவளி பண்டிகையை நெருங்கிய போது, புதிய உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் ரூ.59,000த்தை தாண்டியது. இது வரலாற்றில் அதிகபட்ச விலையாகும்.
கடந்த 3 நாட்களில் ரூ.1,120 உயர்ந்தது. தீபாவளி பண்டிகையான நேற்று ரூ.59,640க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080க்கும், ஒரு கிராமுக்கு ரூ.70 சரிந்து ரூ.7,365க்கும் விற்பனையாகிறது. அதேபோல, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 குறைந்து ரூ.106க்கும், கிலோ ரூ.3 ஆயிரம் சரிந்து ரூ.1,06,000க்கும் விற்பனையாகிறது.