ADDED : ஆக 09, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'மாநில கல்வி கொள்கையில், பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து என்பது தவறான முடிவு' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மாநில கல்வி கொள்கையில், பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு.
இது, மேல்நிலை கல்வியை மட்டுமின்றி, உயர் கல்வியின் தரத்தையும், தொழிற்கல்வியின் தரத்தையும் கெடுத்து விடும். எனவே, முதல்வர் ஸ்டாலின், இம்முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.