தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பல்லடத்தில் இன்று பொதுக்கூட்டம் பிரதமர் பங்கேற்பு

பல்லடத்தில் இன்று பொதுக்கூட்டம் பிரதமர் பங்கேற்பு

பல்லடத்தில் இன்று பொதுக்கூட்டம் பிரதமர் பங்கேற்பு


ADDED : பிப் 27, 2024 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்: பல்லடம் அடுத்த மாதப்பூரில், பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பா.ஜ., தேர்தல் பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூரில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், 'என் மண்; என் மக்கள்' பாத யாத்திரை நிகழ்ச்சி நிறைவு விழா மற்றும் பா.ஜ., தேர்தல் பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது.

இதில், பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தெற்கு நோக்கி இருக்கும் வகையில், 80 அடி நீளம், 60 அடி அகலம் உடைய பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மேடையின் மேல் பகுதியில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டு, 'வேண்டும் மோடி; மீண்டும் மோடி' என்ற வாசகத்துடன், மோடி மற்றும் அண்ணாமலை படங்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம், ஐந்து லட்சம் பேர் வரை அமர்ந்து பார்க்கும் வகையில் சேர்கள் போடப்பட உள்ளன.

பிரத்யேக பாதை


ஏறத்தாழ, 250 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மேடையின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'ஹெலிபேடில்' பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மதியம் 2:10 மணிக்கு பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகிறார்.

அங்கிருந்து, பிரத்யேக பாதை வழியாக வரும் பிரதமர், பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள பொதுமக்களை சந்தித்து விட்டு மேடைக்கு வருகிறார். ஒரு மணி நேரம் பிரதமர் சிறப்புரையாற்றுகிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி 4,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us