அடுத்த மாதம் மீண்டும் சென்னை வருகிறார் பிரதமர் மோடி?
அடுத்த மாதம் மீண்டும் சென்னை வருகிறார் பிரதமர் மோடி?
ADDED : ஜன 22, 2024 05:57 PM

சென்னை: பிப்ரவரி 2ம் வாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியின் கடந்த 9 ஆண்டுகள் ஆட்சி சாதனைகளை தமிழகம் முழுக்க எடுத்து சொல்லும் விதமாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” எனும் பெயரில் நடைபயணத்தை கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கினார். இந்த பயணம் ராமேஸ்வரத்தில் இருந்து துவங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நடைபயணத்தை பிப்ரவரி மாதத்தில் முடிக்க தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதற்கான நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பிப்ரவரி 2வது வாரத்தில் பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் மாநாடு இடம் இறுதி செய்யப்பட்டு பிரதமரின் வருகை குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த ஆண்டில் 3வது முறையாக தமிழகத்திற்கு வருகிறார். ஏற்கனவே, ஜன.,2 மற்றும் ஜன.,19ல் தமிழகம் வந்திருந்தார்.
விரைவில் மாநாடு இடம் இறுதி செய்யப்பட்டு பிரதமரின் வருகை குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளது.