பிரதமரின் வருகை தமிழகத்திற்கு பெருமை; அமைச்சர் தங்கம் தென்னரசு புகழாரம்
பிரதமரின் வருகை தமிழகத்திற்கு பெருமை; அமைச்சர் தங்கம் தென்னரசு புகழாரம்
ADDED : ஜூலை 25, 2025 03:15 PM

சென்னை; ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது தமிழகத்திற்கு பெருமை என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.
முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த தினம், தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சார் பயணத்தின் 1000வது ஆண்டு, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கட்டுமானத் தொடக்கம் ஆகியவற்றை நினைவு கூரும் வகையில் ஆடித் திருவாதிரை திருவிழாவாக ஜூலை 25 முதல் ஜூலை 27 வரை மத்திய அரசு கலாசார அமைச்சகம் கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடுகிறது.
இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி ஜூலை 27ம் தேதி நடக்கிறது. அதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவரின் வருகை தமிழகத்திற்கு பெருமை என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டி;
கங்கை கொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழன் உருவாக்கிய தலைநகர். அவரின் கடல் கடந்த படையெடுப்பின் ஆயிரமாவது ஆண்டு விழாவை குறிக்கக்கூடிய வகையில், பிரதமர் மோடி வரும் 27ம் தேதி கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வர உள்ளார். இது தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய ஒரு பெருமையாக நாங்கள் கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.