தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/யு.ஜி.சி., சாதிவாரி கணக்கெடுப்பு! ஸ்டாலின் இரட்டை வேடம் என அன்புமணி கேள்வி

யு.ஜி.சி., சாதிவாரி கணக்கெடுப்பு! ஸ்டாலின் இரட்டை வேடம் என அன்புமணி கேள்வி

யு.ஜி.சி., சாதிவாரி கணக்கெடுப்பு! ஸ்டாலின் இரட்டை வேடம் என அன்புமணி கேள்வி


ADDED : ஜன 20, 2025 05:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2025 05:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை; யு.ஜி.சி., விதிகளில் ஒரு வேடம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் இன்னொரு வேடமா? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

துணைவேந்தர்கள் நியமனம் குறித்த பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிகள் தொடர்பான விவகாரத்தில் மாநில உரிமைகளைக் காக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ., ஆட்சி நடக்காத மாநிலங்களின் முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது நல்ல முயற்சி தான். பா.ம.க.,வும் அதைத் தான் வலியுறுத்தி வருகிறது.

அதே வேளையில், சமூக நீதியைக் காப்பதற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் விவகாரத்தில் தமிழக அரசின் உரிமைகளை அப்பட்டமாக தாரை வார்த்துக் கொண்டிருக்கிறாரே, அந்த விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை எவ்வாறு காப்பது என்பது குறித்து இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ள பீகார், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியாவது கேட்டறிவாரா முதல்வர் ஸ்டாலின்?

மாநில உரிமைகளைக் காப்பதில் யு.ஜி.சி., விதிகளில் ஒரு வேடம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் இன்னொரு வேடமா? எப்போது கலையும் இந்த இரட்டை வேடம்?

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us