ADDED : செப் 29, 2011 09:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளருக்கு, அனைத்து கட்சிகளும் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், பா.ம.க., மட்டும் போட்டியிலிருந்து பின்வாங்கியது.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவுக்கு, 'பிள்ளையார் சுழி போட்ட' கட்சியாக பா.ம.க.,வை கூறுகின்றனர். அனைத்து பகுதிக்கும் அக்கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட போது, மதுரை மேயர் வேட்பாளராக ரமேஷ் என்பவரை, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்தார். இறுதிநாளான இன்று, பா.ம.க., வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்த்த நிலையில், கடைசி வரை அவர் வரவில்லை. இதன் மூலம், மதுரை மேயர் போட்டியிலிருந்து பா.ம.க., பின்வாங்கியுள்ளது.