தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பா.ம.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

பா.ம.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

பா.ம.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்


ADDED : ஜூன் 17, 2025 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 06:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம் : பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, சில நாட்களாக, பா.ம.க.,வினர் குழப்பத்தில் உள்ளனர். இருவருக்கும் நடக்கும் மோதலில், யாருடன் செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பா.ம.க. நிர்வாகிகள் சிலர் மாற்றுக்கட்சிகளுக்கு செல்லவும் தயாராகி வருகின்றனர்.

இதனிடையே மயிலாடுதுறை மாவட்ட செயலர் லண்டன் அன்பழகன், சேலத்தில் நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருடன் கொள்ளிடம் ஒன்றிய செயலர் பாலதண்டாயுதம், மாநில துணை செயலர்கள் குட்டிமணி, அமிர்தராஜ் உட்பட, 35 பேர் அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us