ADDED : அக் 06, 2025 02:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பா. ம.க., தலைவர் அன்புமணி சுற்றுப்பயணம் துவங்கியுள்ள நிலையில், அக்கட்சி நிறுவனரான ராமதாஸ் கிராமம்தோறும் செல்ல திட்டமிட்டு, இதற்கான அறிவிப்பை வெ ளியிட இருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு ஏற்ப ட்ட திடீர் உடல் குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ராமதாஸ் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதய பரிசோதனைகள் செய்வதற்காக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக, பா.ம.க.,வினர் தெரிவித்தனர்.