sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொண்டர்களே என் குலதெய்வம்; அவர்களுக்காக எதையும் செய்வேன்: ராமதாஸ் நெகிழ்ச்சி

/

தொண்டர்களே என் குலதெய்வம்; அவர்களுக்காக எதையும் செய்வேன்: ராமதாஸ் நெகிழ்ச்சி

தொண்டர்களே என் குலதெய்வம்; அவர்களுக்காக எதையும் செய்வேன்: ராமதாஸ் நெகிழ்ச்சி

தொண்டர்களே என் குலதெய்வம்; அவர்களுக்காக எதையும் செய்வேன்: ராமதாஸ் நெகிழ்ச்சி

12


ADDED : ஜூன் 09, 2025 05:48 PM

Google News

ADDED : ஜூன் 09, 2025 05:48 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; தொண்டர்கள் தான் எனது குலதெய்வம். அவர்களுக்காக எதையும் செய்வேன் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார்.

சென்னையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது;

எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்கிறது, எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு ஏற்படும்.எங்களுடைய கட்சிக்கும், நாட்டுக்கும் அது ஒரு சரியான தீர்வாக இருக்கும். அந்த தீர்வு ஏற்படும் போது உங்களுக்கு தெரியாமல் இருக்காது. சற்று பொறுத்திருங்கள். அதுவரை உங்களிடம் இருந்து பிரியாவிடை பெறுகிறேன்.

நிருபர்: 2024ல் பா.ஜ., வுடன் கூட்டணி நிலைப்பாடு இல்லை என்று கடந்த முறை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருந்தீர்கள்? இப்போதும் அதே நிலைப்பாட்டில் இருக்கிறீர்களா?

ராமதாஸ்; அதை இப்பொழுது சொல்ல முடியாது.

நிருபர் ; பா.ம.க., இடதுசாரி சிந்தனையுடன் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி, தற்போது வலதுசாரி சிந்தனை மேலோங்கி இருக்கிறது என்று திருமாவளவன் கூறியதை எப்படி பார்க்கிறீர்கள்?

ராமதாஸ்; பூதக்கண்ணாடி இல்லையே.... (என்று சொல்லிவிட்டு நாற்காலியை விட்டு எழுகிறார்)

நிருபர்(குறுக்கிட்டு); பா.ம.க., தொண்டர்களுக்கு சொல்லக்கூடியது செய்தி என்ன உள்ளது?

ராமதாஸ்; தொண்டர்கள் எப்பொழுதும், எந்நாளும் என் பக்கம் தான். என் பக்கம் தான் என்று சொல்வதை விட எனக்கு, என்னை குல தெய்வமாக நினைக்கக்கூடிய கோடானுகோடி தொண்டர்களை, தொண்டர்கள் என்று சொல்வதை விட என்னுடைய சொந்தங்களை... அவர்கள் தான் எனது வழிகாட்டிகள். அந்த வகையில் அவர்களின் நலத்துக்காக நான் அவர்களின் முன்னேற்றத்துக்காக எதையும் செய்வேன்.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.






      Dinamalar
      Follow us