'அடக்குமுறையை ஏவினாலும் பா.ம.க., போராட்டம் தொடரும்'
'அடக்குமுறையை ஏவினாலும் பா.ம.க., போராட்டம் தொடரும்'
ADDED : ஜன 03, 2025 07:02 PM
சென்னை:'ஆயிரமாயிரம் அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டாலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பா.ம.க., போராட்டம் தொடரும்' என, அக்கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை, அண்ணா பல்கலை வளாகத்தில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க வலியுறுத்தியும், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், வள்ளுவர் கோட்டம் அருகில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா தலைமையில் போராட்டம் நடத்திய ஏராளமான பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
காவல் துறை அனுமதி அளிக்காத போதும், துணிச்சலுடன் போராடிய அனைவருக்கும் பாராட்டுகள். குற்ற உணர்வில் தவிக்கும் தி.மு.க., அரசால், ஆயிரமாயிரம் அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டாலும், அவை அனைத்தையும் முறியடித்து, பெண்களுக்கு நீதியும், பாதுகாப்பும் பெற்றுத் தரும் வரை ஓய மாட்டோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

