பா.ஜ., நிர்வாகி சிக்கினார்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் எழில்இசை, 24; பா.ஜ., நகர இளைஞரணி துணைத்தலைவர். இவர், கராத்தே பயிற்சியும் அளித்து வருகிறார். ஒரு மாதத்திற்கு முன், இவர் பயிற்சி அளித்த மாணவிக்கு, ஆண் குழந்தை பிறந்தது. போலீசார் சந்தேகத்தின்படி, எழில்இசையின் டி.என்.ஏ.,வை பரிசோதனைக்கு அனுப்பியதில், மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் எழில்இசை என, தெரிந்தது. அவரை போக்சோவில், நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை கடத்தியவர் கைது
திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ் 2 முடித்து வீட்டில் இருந்தார். ஏப்., 3ம் தேதி, கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் முசிறி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மாயமான சிறுமியை தேடினர். இந்நிலையில், முசிறி அருகே அழிஞ்சிக்குத்துபள்ளத்தை சேர்ந்த விஜயகுமார், 25, ஆசைவார்த்தை கூறி, சிறுமியை கடத்தி, சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. போலீசார் சிறுமியை மீட்டு, விஜயகுமாரை போக்சோவில் கைது செய்தனர்.