
இடைநிலை ஆசிரியர் கைது கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., பணிக்கம்பட்டி திரு.வி.க., அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில், பாலியல் குற்றம் நடப்பதாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார் சென்றது. செப்., 23ல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், பள்ளியில் விசாரணை நடத்தினார்.
இதில் ஆசிரியர் சிவக்குமார், ஆறாம் வகுப்பு மாணவியரிடம் சீண்டலில் ஈடுபட்டது தெரிந்தது. குளித்தலை போலீசார், போக்சோ சட்டத்தில், சிவக்குமாரை நேற்று கைது செய்தனர்.
இளைஞருக்கு '20 ஆண்டு' ஈரோடு: ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியை சேர்ந்தவர் தீபக், 31; பைக் மெக்கானிக். திருப்பூரை சேர்ந்த, 15 வயது பள்ளி மாணவி ஒருவருடன், அவருக்கு சமூக வலைதளத்தில் பழக்கம் ஏற்பட்டது. 2023ல் தீபக், அந்த மாணவியை திருமணம் செய்வதாக கூறி தாளவாடி பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
மாணவியின் பெற்றோர் புகாரின்படி, அனுப்பர்பாளையம் போலீசார், போக்சோவில் தீபக்கை கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டி ல் நடந்த இந்த வழக்கில், தீபக்கிற்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி கோகிலா தீர்ப்பளித்தார்.