ADDED : அக் 21, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி : திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தமிழக வெற்றிக் கழக திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் பிரகாசம் தலைமையில், கட்சி நிர்வாகிகள், 100 அடி நீளமுள்ள கட்சிக் கொடியுடன் நேற்று காலை வந்தனர்.
பின், கட்சியின் முதல் அரசியல் மாநாடு வெற்றி பெற வேண்டும் என, கட்சிக் கொடியை பிடித்தவாறு மலைக்கோவில் தேர்வீதியில் ஊர்வலமாகச் சென்றனர். பின், கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்தினர்.
திருத்தணி முருகன் கோவிலில் அனுமதி இன்றி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை தேர்வீதியில் ஊர்வலமாக கட்சி நிர்வாகிகள் கொண்டு சென்றதற்கு எதிர்ப்பு, தெரிவித்து, கோவில் கண்காணிப்பாளர் சார்பில் திருத்தணி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

