பதக்கம் வென்ற போலீசாருக்கு ரூ.3.75 லட்சம் ரொக்கப்பரிசு
பதக்கம் வென்ற போலீசாருக்கு ரூ.3.75 லட்சம் ரொக்கப்பரிசு
ADDED : ஜன 04, 2025 08:59 PM
சென்னை:முதல்வர் கோப்பைக்கான, மாநில அளவிலான விளையாட்டு போட்டியில், பதக்கம் வென்ற போலீசாருக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், 3.75 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கினார்.
சென்னை அருகே மேலக்கொட்டையூரில் உள்ள, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையில், முதல்வர் கோப்பைக்கான, மாநில அளவிலான விளையாட்டு போட்டி, அக்., 13 - 16 வரை நடந்தது.
இதில், காவல் துறை சார்பில், பேட்மின்டன் போட்டியில், அதிகாரிகள் மற்றும் போலீசார் என, 10 பேர் பங்கேற்றனர்; ஒன்பது பதக்கங்கள் வென்றனர்.
அவர்களுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு ஒரு லட்சம் ரூபாய், வெள்ளி பதக்கம் வென்றவருக்கு தலா 75,000 ரூபாய், வெண்கல பதக்கம் வென்றவருக்கு, 50,000 ரூபாய் பரிசு வழங்கினார்.
அதேபோல, இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதற்கு, 75,000 ரூபாய், வெள்ளிப் பதக்கம், 50,000 ரூபாய், வெண்கலப் பதக்கம் வென்றதற்கு, 25,000 ரூபாய் என, மொத்தம், 3.75 லட்சம் ரூபாய் வழங்கினார்.