ADDED : பிப் 14, 2025 05:03 AM
உளுந்துார்பேட்டை: தகராறில் சமரசம் செய்தபோது போலீசார் தள்ளியதில் மூதாட்டி கீழே விழுந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.
உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு, 70; இவர், தனது பேரன் படையப்பா,24; மற்றும் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை பார்க்க வந்தார். அப்போது, படையப்பாவிற்கும், உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சமாதானம் செய்தும் பிரச்னை முடியவில்லை.
புறக்காவல் நிலைய பகுதியில் படையப்பா சுவரில் தலையில் இடித்துக் கொண்டார். இவரை போலீசார் பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனை தடுத்த சின்னபொண்ணை போலீசார் தள்ளியதில் கீழே விழுந்தார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.

