ADDED : நவ 08, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் எந்த சம்பவம் நடந்தாலும் போலீசார் அளவுக்கு அதிகமாக 'ரியாக்ட்' செய்வது வழக்கமாக உள்ளது. அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமையில் ஒருத்தர் தான் குற்றவாளி என்றனர்.
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இருவரை என்கவுன்டரில் கொன்றனர். கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், காவல் துறையிடம் இருந்து முதலில் வந்த அறிக்கையும், கமிஷனர் சொல்வதும் முரண்பாடாக உள்ளது. சம்பவ இடத்துக்கு, 100 போலீசார் சென்றும் அந்த பெண்ணை ஏன் கண்டறிய முடியவில்லை?
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை போல், கோவை மாணவி வன்கொடுமை வழக்கை யும் சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கலாமே.
- எச்.ராஜா
மூத்த தலைவர், பா.ஜ.,

