ADDED : ஆக 04, 2025 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: ஆணவ கொலை செய்யப்பட்ட கவீன் வீட்டிற்கும், அவரது தந்தைக்கும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அடுத்த ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் கவின் செல்வ கணேஷ், 27. ஐ.டி., ஊழியரான இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர். ஜூலை 2ல் ஆணவ கொலை செய்யப்பட்டார். கொலை குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாநில எஸ்.சி., - எஸ்.டி., ஆணைய தலைவர் தமிழ்வாணன் விசாரணை நடத்தினார். அப்போது, கவின் தந்தை சந்திரசேகர் உயிருக்கும், குடும்பத்தாருக்கும் ஆபத்து இருப்பதாக, அவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கவின் வீட்டிற்கும், அவரது தந்தைக்கும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

