ஆலமரத்தில் தொங்க விடப்பட்ட திருட்டு பணம்; மீட்ட போலீஸ்
ஆலமரத்தில் தொங்க விடப்பட்ட திருட்டு பணம்; மீட்ட போலீஸ்
ADDED : டிச 11, 2024 08:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தசரவணன் திண்டுக்கல் சாலையில் உள்ள வங்கிக்கு சென்று திரும்பும்போது, டூ - வீலரில் வைத்திருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை சிலர் திருடினர்.
இதுகுறித்து போலீசார் நான்கு மாதங்களாக விசாரித் தனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நடந்த திருட்டு தொடர்பாக கைதான ஆந்திராவைச் சேர்ந்த நாகராஜ், 52, வெங்கடேசன், 30, ஆகியோர் சிங்கம்புணரியில் பணத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.
இருவரையும் சிங்கம்புணரி போலீசார் விசாரித்தபோது, திருடிய பணத்தை மணல்மேட்டுப்பட்டி ரோட்டில் உள்ள ஆலமரத்தில் கட்டி தொங்க விட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அளித்த தகவலின்படி குறிப்பிட்ட அந்த மரத்திலிருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர்.