ADDED : ஆக 21, 2025 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறையில், 3,644 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவற்றுக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
காவல் துறைக்கு 2,833 பேர்; சிறைத்துறைக்கு 180 பேர், தீயணைப்பு துறைக்கு, 631 பேர் என, மொத்தம், 3,644 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். காவல் மற்றும் சிறைத்துறை பணிக்கு, இருபாலரும், தீயணைப்பு துறைக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
இன்று முதல், செப்., 21ம் தேதி வரை, www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, நவம்பர் 9ல் நடக்கும் என, சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

