உ.பி., பெண் துறவி மீதான தாக்குதல் புகார் பொய் போலீசார் தகவல்
உ.பி., பெண் துறவி மீதான தாக்குதல் புகார் பொய் போலீசார் தகவல்
ADDED : மார் 12, 2024 02:28 AM
ராமநாதபுரம்: உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு பாதயாத்திரை சென்ற பெண் துறவி ஷிப்ராபதக்வுடன் 38, வந்த சகோதரர் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் உண்மையில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அயோத்தியை சேர்ந்த பெண் துறவி ஷிப்ராபதக் பஞ்சபூதங்கள், நீராதாரங்களை பாதுகாப்பது குறித்தும், ஸ்ரீராமபிரான் வந்து சென்ற ராமேஸ்வரம் வரை 4000 கி.மீ., பாதயாத்திரை மேற்கொண்டார். அவருடன் தந்தை, சகோதரர் உடன் வந்தனர்.
பரமக்குடி பகுதியில் வந்த போது சிலர் ஸ்ரீராமருக்கு எதிராக கோஷமிட்டு ராமர் படக்கொடியை கிழித்து, சகோதரர் வந்த காரின் கண்ணாடியை உடைத்ததாக ஷிப்ராபதக் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் டி.எஸ்.பி., நிரேஸ் தலைமையில் 3 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஷிப்ரா பதக் அளித்த புகாரில் உண்மை இல்லை.
தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடக்கிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.---------

