தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஸ்டாலினுக்கு போலீஸ் பாதுகாப்பு குறைப்பு!

ஸ்டாலினுக்கு போலீஸ் பாதுகாப்பு குறைப்பு!

ஸ்டாலினுக்கு போலீஸ் பாதுகாப்பு குறைப்பு!

1


ADDED : ஆக 29, 2026 08:46 PM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : ஆக 29, 2026 08:46 PM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வீட்டில், திடீரென போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்ப்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில், ஸ்டாலின் வீடு உள்ளது. அந்த வீட்டை சுற்றி, 4 நுழைவாயில்களில் 24 மணி நேரமும், 20 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த பாதுகாப்பு, தற்போது பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து துணை கமிஷனர் ஒருவர் கூறியதாவது:

மாநில பாதுகாப்பு ஆய்வுக் குழு கூட்டம், சமீபத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் தலைவர்கள் குறித்தும், அவர்களுக்கான பாதுகாப்பை குறைப்பது குறித்தும் ஆலோசனை நடந்தது.

அதில் எடுத்த முடிவுகள் அடிப்படையில், திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டை சுற்றி 4 இடங்களில் அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு, 2 இடங்களாக குறைக்கப்பட்டு உள்ளது. இரண்டு தலைமைக் காவலர்கள் உட்பட, 10 போலீசார், இரண்டு நுழைவாயில்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us